Sunday, 25 March 2012

விண்வெளியில் ஸ்பேஸ் ஷிப்பில் இருந்து தப்பிய 6 பேர்!


விண்வெளியில் ரஷ்ய ராக்கெட் ஒன்றில் இருந்து சிதறி வீழ்ந்த பாகம் ஒன்று, விண்வெளி ஆய்வு நிலையம் (Space Station) ஒன்றில் மோதலாம் என்ற அபாய நிலை நேற்று காலை ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்த 6 விண்வெளி வீரர்கள், பாதுகாப்பு தேடி சரியான நேரத்தில் வெளியேறினர்.
ரஷ்ய ராக்கெட்டில் இருந்து சிதறி வீழ்ந்த பாகம், இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் மோதி ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு நெருக்கமாக வந்தது என்று தெரிவித்துள்ளது நாசா.
இப்படியொரு ஆபத்து நெருங்கியபோது, ஸ்பேஸ் ஸ்டேஷனில் 6 விண்வெளி வீரர்கள் (இரு அமெரிக்கர்கள், மூன்று ரஷ்யர்கள், ஒரு டச்சுக்காரர்) இருந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில்தான் ஆபத்து நெருங்குவதை இவர்கள் கண்டுகொண்டதால், உடனடியாக ஸ்பேஸ் ஸ்டேஷனை அங்கிருந்து நகர்த்த அவர்களால் முடிந்திருக்கவில்லை.
காலை 6.38க்கு (GMT) ரஷ்ய ராக்கெட் பாகம், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு மிக நெருக்கமாக வந்துவிடவே, ஆறுபேரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறி, பூமிக்கு திரும்பும் ராக்கெட்டில் ஏறிக்கொண்டனர். ஆபத்து நெருங்கினால் பூமிக்கு திரும்ப தயார் நிலையில் காத்திருந்தனர்.
நல்ல வேளையாக, ஸ்பேஸ் ஷிப்புக்கு 14 மைல்கள் வரை நெருக்கமாக வந்துவிட்ட ரஷ்ய ராக்கெட் பாகம், திசை மாறிச் சென்றுவிட்டது. அதன்பின், மீண்டும் ஸ்பேஸ் ஷிப் திரும்பியுள்ளார்கள் ஆறு விண்வெளி வீரர்களும்.