5 முறை சுற்றுவட்டப் பாதை மாற்றும் தொகுதி கட்டுப்பாட்டு மூலம், 3ம் நாள் விடியற்காலை, சென் சோ எட்டு மனிதர் செல்லாத விண்கலம், தியன் குங் ஒன்று விண்வெளிக் கலத்துடன் விண்வெளியில் வெற்றிகரமாக இணைந்தது. தற்போது இரண்டு விண்கலன்களும் ஒன்று சுற்றுவட்டப் பாதையில் இயங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ரஷியாவை அடுத்து, உலகில் விண்கலன்கள் விண்வெளியில் இணையும் நுட்பத்தை கிரகித்துக்கொண்ட 3வது நாடாக சீனா மாறியிருக்கிறது. இது, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்ட இலட்சியத்தில் புதியக் கட்டத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் விண்கலன்கள் இணைவது என்பது, விண்வெளி சுற்றுவட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி கலங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்தித்து இணைந்து ஒரே விண்வெளி கலமாக மாறி, இயங்குவதை குறிக்கிறது. இதில் 4 சிக்கல்கள் உள்ளன.
ஒன்று, விண்வெளியில் இணையும் விண்வெளி கலங்களின் வேகம் அதிகம். அவை மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். எனவே சரியான கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம்.
இரண்டு, விண்வெளியில் விண்கலன்கள் இணையும் வரை, இரு விண்வெளி கலங்களும், தத்தமது தனிப்பட்ட பாதைகளில் இயங்கி கொண்டிருக்கும். அவ்வாறு புவியை சுற்றி இயங்கி வரும் போது, இரு விண்வெளி கலங்களுக்கிடையிலான தொலைவை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மூன்று, உயர் நிலை துல்லிய அளவீட்டை செவ்வனே செய்து கட்டுப்படுத்த வேண்டும். இரு விண்வெளி கலங்களின் அளவீட்டு கருவிகள், மிக மிக துல்லியமாக அளவிட வேண்டும். இரு விண்வெளி கலங்களின் பாதைகள் இருக்கும் இடம், தூரம், இயங்கும் வேகம் ஆகியவற்றை வெகுவிரைவாக துல்லியமாக அளவிட வேண்டும். சில முறை மேற்கொள்ளப்படும் பாதை மாற்ற கட்டுப்பாட்டின் மூலம், இரு விண்வெளி கலன்களும் ஒன்றை ஒன்று நோக்கி வர செய்ய வேண்டும்.
நான்கு, சிக்கலான நுட்பங்களுடைய விண்கலங்களின் இணைப்புக் கருவிகளை செவ்வனே உருவாக்க வேண்டும். இணைப்பு தொகுதி கருவிகளில் பத்துக்கு மேற்பட்ட கருவிகள் இருக்கின்றன. அதனால், ஒரு முறை விண்கலங்கள் இணைய பத்துக்கு மேற்பட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், விண்வெளியில், காற்று இல்லை, மிகவும் குளிர், புவி ஈர்ப்பு ஆற்றல் குறைவு இத்தகைய சூழலில், இந்த நடவடிக்கைகள் மிக கடினமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த 4 சிக்கல்கள் குறித்து, சீன விண்வெளி பணியாளர்கள், வெளிநாட்டு விண்வெளி நிலையங்களின் விண்கலன்கள் இணைப்பு அனுபவங்களை கற்றுக்கொண்டு, தங்களது முயற்சிகளால், சீனாவின் விண்வெளி கலங்கள் விண்வெளியில் ஒன்றாக இணையும் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment